ஸ்ரீ நாகவல்லி அம்மன் ஆலயம்
சின்னகாலாப்பட்டு , புதுச்சேரி-14.
ஸ்ரீ நாகவல்லி அம்மன் ஆலயம்
சின்னகாலாப்பட்டு , புதுச்சேரி-14.
பொது நிர்வாக விதிகள் மற்றும் ஒழுங்குமுறை ஆவணம்
ஆவண எண் : SNVAT/TMC/BL/2019/01
தேதி : 21-03-2019
மொத்த பக்கங்கள் : 09 (ஒன்பது)
1. முன்னுரை:
புதுச்சேரி மாநிலம் உழவர்கரை நகராட்சி சின்னக்காலாப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகவல்லி அம்மன் திருக்கோவிலை செப்பனிட்டு ராஜகோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2019ஆம் ஆண்டு ஆலய திருப்பணிக்குழு ஒன்றை உருவாக்குவதற்காக கிராம பொதுச்சபைகூட்டம் கூட்டப்பட்டது. பொதுச்சபைகூட்டத்தில் கட்டிடதுறைசார் நிபுணர்களை கொண்டு திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் செய்ய தீர்மானித்து 40(நாற்பது) உறுப்பினர்களைக்கொண்ட ஆலய திருப்பணிக்குழு உருவாக்கப்பட்டது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட திருப்பணிக்குழுவின் பொது நிர்வாகம் மற்றும் திருப்பணிக்குழு உறுப்பினர்களுக்கான விதிமுறை/ஒழுங்குமுறை ஆவணம் இதுவே ஆகும்.
2. பொது நோக்கம் :
ஸ்ரீ நாகவல்லி அம்மன் திருக்கோவிலை செப்பனிட்டு ராஜகோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் செய்தல்.
அதுநாள் முடிய திருகோவிலின் பொது நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மையை கவனித்தல்.
3. திருப்பணிக்குழு உறுப்பினர்கள்:
சின்னக்காலாப்பட்டு கிராமம் ஸ்ரீ நாகவல்லி அம்மன் திருக்கோவிலின் உபயதாரர்கள் என்ற முறையில் பின்வரும் நபர்கள் திருப்பணிக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல் இதுவே ஆகும் -
1. திரு D.ஏகநாதன் தந்தையார் பெயர் தர்மசிவம், நடுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
2. திரு D.மாரி தந்தையார் பெயர் தேவராசு, நடுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
3. திரு N.ஜெயபால் தந்தையார் பெயர் நாகராஜன், நடுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
4. திரு L.பழனி தந்தையார் பெயர் லட்சுமணன், நடுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
5. திரு K.அரிதாஸ் தந்தையார் பெயர் கதிர்வேல், நடுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
6. திரு R.சுந்தரமூர்த்தி தந்தையார் பெயர் ராமலிங்கம், நடுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
7. திரு R.சேதுராமன் தந்தையார் பெயர் ராமலிங்கம், நடுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
8. திரு S.சுமன்ராஜ் தந்தையார் பெயர் சுகுமார், நடுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
9. திரு K.ராஜா தந்தையார் பெயர் குப்புசாமி, நடுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
10. திரு H.செல்வம் தந்தையார் பெயர் ஹரிகிருஷ்ணன், நடுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
11. திரு A.ஜெகன்நாதன் தந்தையார் பெயர் அரிபுத்ரி, மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
12. திரு A.ஏழுமலை தந்தையார் பெயர் அரிகிருஷ்ணன், மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
13. திரு E.முனிசாமி தந்தையார் பெயர் ஏகநாதன், மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
14. திரு K.சிவா தந்தையார் பெயர் கிருஷ்ணன், மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
15. திரு S.பழனி தந்தையார் பெயர் சஞ்சீவிராயன், மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
16. திரு A.ஆசைத்தம்பி தந்தையார் பெயர் அருணாச்சலம், மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
17. திரு P.இலட்சுமணன் தந்தையார் பெயர் பெருமாள், மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
18. திரு K.கோவிந்து தந்தையார் பெயர் கிருஷ்ணன், மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
19. திரு A.ஆதிமூலம் தந்தையார் பெயர் அரிகிருஷ்ணன், மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
20. திரு A.கண்ணன் தந்தையார் பெயர் வரதராசு, மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
21. திரு N.கணேசன் தந்தையார் பெயர் நடராஜன், மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
22. திரு M.தங்கமணி தந்தையார் பெயர் முனிசாமி, மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
23. திரு R.தண்டபாணி தந்தையார் பெயர் ராமகிருஷ்ணன், மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
24. திரு M.ரகு தந்தையார் பெயர் முனிசாமி, மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
25. திரு M.சேகர் தந்தையார் பெயர் மாயவன், ஆலமரத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
26. திரு M.சக்திவேல் தந்தையார் பெயர் மாதவன், ஆலமரத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
27. திரு K.பூபதி தந்தையார் பெயர் கிருஷ்ணன், ஆலமரத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
28. திரு M.கோதண்டபாணி தந்தையார் பெயர் மாரிமுத்து, ஆலமரத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
29. திரு A.அருணாச்சலம் தந்தையார் பெயர் ஆறுமுகம், ஆலமரத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
30. திரு K.ஞானவேல் தந்தையார் பெயர் களிவரதன், ஆலமரத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
31. திரு M.தாமோதிரன் தந்தையார் பெயர் முனுசாமி, ஆலமரத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
32. திரு N.புவனேஷ் தந்தையார் பெயர் நந்தகோபால், ஆலமரத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
33. திரு S.செல்வகுமார் தந்தையார் பெயர் சீனிவாசன், ஆலமரத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
34. திரு N.தனசேகர் தந்தையார் பெயர் சுந்தரமூர்த்தி, ஆலமரத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
35. திரு மஞ்சினி தந்தையார் பெயர் கோபால்சாமி, புதுநகர், சின்னக்காலாப்பட்டு.
36. திரு S.முருகன் தந்தையார் பெயர் சுப்ரமணியன், புதுநகர், சின்னக்காலாப்பட்டு.
37. திரு K.முருகன் தந்தையார் பெயர் காத்தவராயன், புதுநகர், சின்னக்காலாப்பட்டு.
38. திரு A.ரமேஷ் தந்தையார் பெயர் ஆறுமுகம், புதுநகர், சின்னக்காலாப்பட்டு.
39. திரு செந்தில்குமார் தந்தையார் பெயர் ராமு, புதுநகர், சின்னக்காலாப்பட்டு.
40. திரு K.பூபதி தந்தையார் பெயர் காளிரத்தினம், புதுநகர், சின்னக்காலாப்பட்டு.
41. திரு P.பிரதாப் தந்தையார் பெயர் பொன்னப்பன், புதுநகர், சின்னக்காலாப்பட்டு.
42. திரு நாகேந்திரன் தந்தையார் பெயர் பன்னீர், புதுநகர், சின்னக்காலாப்பட்டு.
43. திரு S.சுரேஷ் தந்தையார் பெயர் சுப்பிரமணி, புதுநகர், சின்னக்காலாப்பட்டு.
44. திரு பாபு (எ) சேகர் தந்தையார் பெயர் ராமு, புதுநகர், சின்னக்காலாப்பட்டு.
4. திருப்பணிக்குழு உறுப்பினர்களின் கடமைகள்:
திருப்பணி குழுவானது ஆலய ராஜகோபுர அமைக்கும் பணி பூர்த்தியாகும்வரை எவ்வித மாற்றங்களும் இல்லாமல் இயங்குதல் வேண்டும்.
ஆலய கட்டிடப் பணிக்கு தேவையான நிதியை சேகரித்தல் மற்றும் நிதியை வெளிப்படையாக கையாளுதல் வேண்டும்.
திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் கடைகளை வரைமுறை படுத்தி, திருக்கோவிலின் வருவாயை பெருக்க வழிவகை செய்தல் வேண்டும்.
சுய ஒழுக்கத்தை பின்பற்றி திருக்கோவிலின் செயற்பாடுகளில் ஒத்துழைப்பு நல்குதல் வேண்டும்.
5. நிதி மேலாண்மை:
தேர்ந்து எடுக்கப்பட்ட திருப்பணிக்குழு உறுப்பினர்களில் நிதி மேலாண்மையை பராமரிக்க, தெருவுக்கு ஒருவர் வீதம் 4 (நான்கு) நிதி மேலாண்மை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நிதி மேலாண்மை உறுப்பினர்களின் பட்டியல் இதுவே ஆகும் -
திரு R.சுந்தரமூர்த்தி தந்தையார் பெயர் ராமலிங்கம், நடுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
திரு K.கோவிந்து தந்தையார் பெயர் கிருஷ்ணன், மேட்டுத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
திரு M.சேகர் தந்தையார் பெயர் மாயவன், ஆலமரத்தெரு, சின்னக்காலாப்பட்டு.
திரு S.முருகன் தந்தையார் பெயர் சுப்ரமணியன், புதுநகர், சின்னக்காலாப்பட்டு.
6. நிதி மேலாண்மை உறுப்பினர்களின் கடமைகள் :
திருக்கோவில் நிர்வாகத்திற்கென தனியாக வங்கி கணக்கு தொடங்கி அதை நிர்வகித்தல் வேண்டும்.
நிதி கொடுக்கல் வாங்கல் கணக்குகளை பராமரித்தல் வேண்டும்.
மாதம் தோறும் பொதுச்சபைகூட்டதில் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும்.
7. முக்கிய நிதி கொள்கைகள்:
ரூபாய் 2,000 (இரண்டாயிரத்திற்கு) மேற்பட்ட சகலவிதமான கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் வங்கியூடாகவே நடைமுறைபடுத்துதல் வேண்டும்.
அனைத்து கொடுப்பனவுகளும் குறைந்த பட்சம் மூன்று நிதி மேலாண்மை உறுப்பினர்களால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நடைமுறைபடுத்துதல் வேண்டும்.
8. நிதிசேகரிப்பு விதிகள்
தேர்ந்து எடுக்கப்பட்ட திருப்பணிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிதி சேகரிப்பாளர்கள் ஆவர்.
நிதி சேகரிப்பாளர்கள் அதற்கென வடிவமைக்கப்பட்ட படிவதை நிதி அளிப்பவரிடம் கொடுத்து அவர்களின் முழுவிபரங்களுடன் அவர்கள் பங்களிப்பு செய்யவிரும்பும் தெகையை பதிவு செய்து கையொப்பமிட்டு பற்றுச்சீட்டு அளித்தல் வேண்டும்.
நிதி பங்களிப்பானது வங்கியூடாக நடைபெறும் பட்சத்தில், பற்றுச்சீட்டில் நிதி பரிவர்த்தனை எண்ணை பதிவு செய்தல் வேண்டும்.
நிதி பங்களிப்பானது காசோலையாக நடைபெறும் பட்சத்தில், பற்றுச்சீட்டில் காசோலை எண்ணை பதிவு செய்தல் வேண்டும்.
நிதி சேகரிப்பாளர்கள் அவர்கள் சேகரித்த நிதியை தெரு வாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிதி மேலாண்மை உறுப்பினர்களிடம் மாதம் ஒருமுறை கூடும் பொதுச்சபைகூட்டதில் கையொப்பமிட்டு அளித்து வரவு வைத்தல் வேண்டும்.
ஊர் சார்பாக பெறப்படும் நிதியை நேரடியாக வங்கியில் இருப்பு வைத்தல் வேண்டும்.
தொழிற்ச்சாலைகள் / பெரும் நன்கொடையாளர்கள் மூலம் பெறப்படும் நன்கொடைகள் அனைத்தும் காசோலை அல்லது வங்கியூடாகவே பெறுதல் வேண்டும்.
மாதம் ஒருமுறை கூடும் பொதுச்சபைகூட்டதில் நிதி மேலாண்மை உறுப்பினர்கள் நிதி நிலை அறிக்கையை சமிர்ப்பித்தல் வேண்டும்.
9. திருக்கோவில் பொதுச்சபைகூட்டம்:
பொதுச்சபைகூட்டம் ஒவ்வொரு மாதமும் பிரதி இரண்டாம் ஞியாயிற்று கிழமை காலை 10.30 மணிக்கு கூட்டப்படல் வேண்டும்.
பொதுச்சபைகூட்டதிற்கான அறிவிப்பு முறையாக அணைத்து உறுப்பினர்களுக்கும் சென்றடைதல் வேண்டும்.
அணைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளுதல் வேண்டும்.
முக்கிய முடிவுகளுக்காக இடையில் கூட்டப்படும் பொதுச்சபைகூட்டதிற்கான அறிவிப்பு முறையாக அணைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.
10. தீர்மானம் மற்றும் முடிவுகள் எடுக்கும் முறை :
தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் எடுக்க குறைத்த பட்சம் 20 தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும்.
தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் அணைத்தும் குரல் வாக்கெடுப்பாகவே நிறைவேற்ற வேண்டும்.
எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற குறைந்த பட்சம் 51% (ஐம்பத்தொரு) சதவீத வாக்குகள் தீர்மானதிற்கு ஆதரவாக இருத்தல் வேண்டும்.
தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் அனைத்தும் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் முறையாக அறிவித்தல் வேண்டும்.
11. உறுப்பினர்களின் விதி முறைகள்:
திருப்பணி குழு உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயல்படுவது/முடிவுகள் எடுப்பது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.
முக்கிய முடிவுகள் அனைத்தும் பொதுச்சபைகூட்டதில் தீர்மானமாக மட்டுமே நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
திருப்பணிகான நிதி மற்றும் திருக்கோயிலின் இதர வருவாயை தனிப்பட்ட செலவுகளுக்காக பயன் படுத்துதல் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக பாவிக்கப்படும்.
ஆலய வளாகம் / திருக்கோவில் சம்பத்தப்பட்ட அணைத்து நிகழ்ச்சிகளிலும் தீய பழக்கவழக்கங்கள் அனைத்தும் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.
.
நிதி கொடுப்பனவுகளில் தன்னிச்சையான முடிவுகள் எடுக்க முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
ஆலய திருப்பணிக்குழு அரசியல் சார்பற்ற அமைப்பு ஆகும். நேரிடையாகவோ, மறைமுகமாகவோ திருப்பணிக்குழுவை அரசியல் நோக்கத்திற்கான களமாக பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
ஆலய வளாகம், திருக்கோவில் பொதுச்சபைகூட்டம் மற்றும் திருக்கோவில் சம்பத்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் சண்டையிடுதல் / தனிப்பட்ட பகைமையை வெளிப்படுத்துதல்/ தகாத வார்த்தைகள் பிரயோகித்தல் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது
.
ஆலய திருப்பணிக்குழுவின் பெயர் மற்றும் அதன் லெட்டர்பேடு ஆகியவற்றை ஆலய திருப்பணிக்கின்றி மற்ற வேலைகளுக்கு பயன் படுத்த முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.
12. புகார் தெரிவிக்கும் முறை :
உறுப்பினர்கள் மீது புகார் ஏதேனும் இருப்பின், பொதுச்சபை கூட்டத்தில் புகாரை எழுத்து மூலமாக சமர்ப்பித்தல் வேண்டும்.
13. ஒழுங்குமுறை நடவடிக்கைகள்:
திருப்பணிக்குழு உறுப்பினர்கள் மேலே கொடுத்துள்ள உட்கூறுகள் அனைத்தையும் தவறாது பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க திருப்பணிக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பணிக்குழு உறுப்பினர்கள் மீது விதிமுறை தொடர்பான புகார்கள் இருப்பின், அவர்களுக்கு முதல் முறை வாய்மொழியாகவும் பிறகு எழுத்து மூலமாகவும் தெரிவித்தல் வேண்டும். உறுப்பினர்கள் மீண்டும் திருபணிக்குழுவின் விதிமுறைகளை மீறும் பட்சத்தில், உறுப்பினரை திருபணிக்குழுவில் இருந்து நீக்கம் செய்திட பொதுச்சபைகூட்டதில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
திருப்பணிக்குழு உறுப்பினர்கள் மீது நிதி முறைகேடு புகார்கள் இருப்பின், எழுத்துமூலமாக விளக்கம் கேட்கப்படும். நிதி முறைகேடு உறுதிப்படுத்தபடும் பட்சத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அந்த உறுப்பினரை திருபணிக்குழுவில் இருந்து நீக்கம் செய்திட பொதுச்சபைகூட்டதில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
14. திருப்பணிக்குழு கலைப்பு:
திருக்கோவிலை செப்பனிட்டு ராஜகோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் செய்த 49(நாற்பத்தி ஒன்பதாவது) நாள், பொதுச்சபைகூட்டத்தில் திருப்பணிக்குழு கலைத்தல் தீர்மானத்தை முன்மொழிந்து திருப்பணிக்குழுவை கலைத்தல் வேண்டும்.
கலைத்தல் தீர்மானத்துக்கு முன் ஒட்டுமொத்த வரவு மற்றும் செலவு கணக்கை தாக்கல் செய்து திருப்பணிக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலை பெறுதல் வேண்டும்.
15. ஆவண திருத்தம்:
இறுதி செய்யப்பட்ட இந்த ஆவணத்தில் திருத்தங்கள் செய்ய பொதுச்சபைகூட்டத்தில் முன்மொழிந்து திருப்பணிக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலை பெறுதல் வேண்டும்.
இடம் : சின்னக்காலாப்பட்டு
தேதி : 21-03-2019